Breaking News

பதவி நீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் பிரதமர் ஆகிறார் : சூடான் ராணுவம் ஒப்புதல்

வட ஆப்ரிக்க நாடான சூடானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் Abdalla Hamdok மீண்டும் பிரதமராக பொறுபேற்க சூடான் ராணுவம் ஒப்பதல் வழங்கி உள்ளது. 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த Omar Al -Bashir ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை அடுத்து இடைக்கால அரசு அமைக்கப்பட்ட நிலையில், இடைக்கால பிரதமராக Abdalla Hamdok நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி சூடான் ராணுவம் இடைக்கால அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் Abdalla Hamdok ஐ பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

Dismissed becomes Prime Minister again. Sudanese military approves.இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 40 பேர் வரை உயிரிழந்ததுள்ளனர். இதனிடையே அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் Abdalla Hamdok ஐ மீண்டும் பதவியில் அமர்த்த சூடான் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

சூடான் மக்கள் மேலும் ரத்தம் சிந்துவதைத் தவிர்க்கும் வகையில் பிரதமர் Abdalla Hamdok ராணுவத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்த ராணுவம் சம்மதித்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சூடானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரவுள்ளது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சூடான் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போராட்டத்தை கலைக்க காவல்துறையின் குறைந்தபட்ச படைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/3nNnbQt