கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளால் என்று வீடுகளில் முடங்கியிருந்த ஆஸ்திரேலிய மக்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இன்னும் பல மாகாணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அமலில் இருந்தாலும், மக்கள் தங்கள் மாகாணங்களுக்குள்ளாகவே பொழுதை கழிக்க விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடாக, கேரவன் வாகனங்களுக்கான ஆர்டர்கள் குவிந்து வருவது தெரியவந்துள்ளது.
அண்மையில் சன்சைன் கடற்கரை பகுதியில் நடைபெற்ற கேரவன் கண்காட்சியில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரவன் எச்.கியூ நிறுவனத்தின் ஈத்தன் போல்,கொரோனா மக்களின் வாழ்கை முறையை மாற்றியமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். வழக்கமான சுற்றுலாவிற்கு பதிலாக மக்கள் கேரவனை நோக்கி படையெடுப்பது, இனி கேரவன் யுகம் என்பதற்கு சான்று என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
கேரவன்களுக்கு மக்களிடையே தேவை அதிகரித்திருந்தாலும், சீனாவில் இருந்து வரும் அலுமினியம், மின்னணு பொருட்களின் வருகை தடை பட்டுள்ளதால் ஏராளமான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு நிலவுவதாக ஈதன் போல் கூறுகிறார்.
ஹார்ட் கார் கேரவன் நிறுவனத்தின் மேலாளர் டோனி டெய்லர் கூறும் போது, கேரவன்களின் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்தாலும், மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் , வாடிக்கையாளர்களின் காத்திருப்பு அதிகரிப்பதாக தெரிவிக்கிறார்.
சில விஷேச வசதிகளை கேட்கும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு மேலும் அதிகரித்திருப்பதாக கூறும் டோனி டெய்லர், சராசரியாக 3 மாதங்களின் கிடைக்கும் கேரவன்கள் தற்போது 15 மாதங்களியே கிடைப்பதாகவும் கூறுகிறார். வர்த்தகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது மகிழ்ச்சியளித்தாலும், மூலப்பொருட்களின் தட்டுப்பாடு கவலையை ஏற்படுத்துவதாக இத்துறை சார்ந்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Link Source: https://ab.co/2Y8R6bF