Breaking News

பெர்த்தில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தாலும், வியாபாரிகள் நிறுவனங்களை திறக்க தயக்கம் தெரிவிக்கின்றனர்.

Despite the curfew relaxation in Perth, traders are reluctant to open companies,.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று காலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனாலும் பெரும்பாலான வர்த்தகர்கள் தங்கள் கடையை திறப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரத்தில் ஏற்பட்ட தொற்று பரவல், காரணமாக ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இது சமூக தொற்றாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

Despite the curfew relaxation in Perth, traders are reluctant to open companiesதொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட நான்கு நாட்கள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்தாலும் மேலும் 3 நாட்களுக்கு வர்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வணிக நிறுவனங்களில் 20 பேர் கட்டுப்பாடு, கட்டாயமாக கவசம் அணிதல்,
4 அடிக்கு ஒருவர் என்ற தனிநபர் இடைவெளி கட்டுப்பாடு, வர்த்தகர்களுக்கு நஷ்டத்தை விளைவிக்கும் என்று கருதுகின்றனர்.

இதன் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு கடையை திறக்கப் போவதில்லை என்று இரவு மதுபான விடுதி உரிமையாளர் டேவிட் தெரிவித்துள்ளார்.

Despite the curfew relaxation in Perthமதுபான விடுதி இயக்குவதால் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அதன் காரணமாகவே அடுத்த 3 நாட்களுக்கு கடையை திறப்பதில்லை என்று முடிவெடுத்து இருப்பதாகவும் டேவிட் தெரிவித்துள்ளார். மேலும் திறந்தவெளியில் செயல்பட கூடிய உடற்பயிற்சி நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் 4 அடிக்கு ஒருவர் என்ற கட்டுப்பாடும் 20 நபர்களுக்கு மிகாமலும் அந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

மேலும் பெர்த் மற்றும் பீல் பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் ஜூலை 12ஆம் தேதி வரை தொடர்கிறது ல்.

பொது நிகழ்ச்சிகளிலும் திருமணங்களிலும் கலந்து கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Despite the curfew relaxation in Perth, traders are reluctant to open companies,மேற்கு ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளுக்கு பயணம் செய்யம்பட்சத்தில் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் மார்க் மெக்கோவன் மக்களின் நலனுக்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று நாட்களில் சில கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் ஜூலை 12-ஆம் தேதி வரை தொடரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3hgsowI