Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வர்த்தக நிவாரண திட்டத்துக்கு மத்திய அரசு உதவ வாய்ப்பில்லை என்று துணை பிரதமர் பார்னபே ஜாய்ஸ் மறுத்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதே போல சிறு நிறுவனங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தங்கள் வர்த்தம் 40% குறைந்துள்ள நிறுவனங்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நியூ சவுத் வேல்ஸ் முன்வந்துள்ளது. 1 பில்லியன் டாலர் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த துணை பிரதமர் பார்னபி ஜாய்ஸ், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிராவணம், தடுப்பூசி, பரிசோதனை கருவிகள் என்று நிறைய திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Deputy Prime Minister Barnaby Joyce has denied that the federal government is likely to help with the New South Wales province's trade relief plan..இதற்கு பதிலளித்த நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரிமியர் டாம்னிக், நீண்ட ஊரடங்களால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தங்களின் நிதி நிலை மேம்பட்டுள்ளதால், தற்போது இத்திட்டம் சாத்தியம் என்று கூறுகிறார். மத்திய அரசு இத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்க முடியாது என்று தெரிவித்திருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே நேரம் ஊரடங்களால் பாதிப்பை சந்தித்த நிறுவனங்களுக்கு உதவுவது நமது அவசியம் என்று கூறுகிறார்.

இங்கு இருக்கும் வர்த்தகர்களை, நியூ சவுத் வேல்ஸ் மாகாண வர்த்தகர்களாக பார்க்காமல், ஆஸ்திரேலிய வர்த்தகர்களை பார்க்க வேண்டும் என்று பிரிமீயர் வலியுறுத்தியுள்ளார். அதே போல ரேப்பிட் ஆண்டிஜென் பற்றாக்குறைக்கு மக்கள் அதனை பதுக்குவதே காரணம் என்றும் துணை பிரதமர் பார்னபே தெரிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள்னர். தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 13, 524 பேர் இம்மாகாணத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3KXYMRr