Breaking News

வடக்கு ஆஸ்திரேலியாவின் ராணுவத்தளங்களில் மிகப்பெரும் முதலீடுகள் மறுப்பு – மறைமுகமாக சீனாவுக்கு செய்தி சொல்லும் பிரதமர் ஸ்காட் மோரிசன்

Denial of huge investments in North Australian military bases - Prime Minister Scott Morrison indirectly sending a message to China

வடக்கு ஆஸ்திரேலியாவில் அடுத்த பத்தாண்டுகளில் பாதுகாப்புத்துறையை 747 மில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தும் திட்டம் மற்றும் 8 பில்லியன் டாலர் செலவில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தை டார்வினில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த தளங்கள் ஆஸ்திரேலியா – அமெரிக்கா ராணுவப்பயிற்சிக்கான இடமாகவும், சுழற்சி முறையில ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படையினருக்கு ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். ஆஸ்திரேலிய ராணுவத்தை முறையாக பயன்படுத்துவதற்கான குறிக்கோள் என்பது, மோதலுக்கு தயாராவதை விட நிலையற்ற பிராந்தியங்களில் அமைதியை நிலைநாட்டுவதே என்று குறிப்பிட்டார்.

அதே நேரம், புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தைவான் தொடர்பாக தெரிவித்த கருத்துகளை அவர் ஆமோதித்தார். தைவான் தொடர்பாக சீனாவுடன் மோதலுக்கான சாத்தியக்கூறுகள் எதிலிருந்தும் பின்வாங்கப்போவதில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.

பாதுகாப்புப்படையின் நோக்கம் முழுவதும் அமைதியை பின்தொடரும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், உறுதித்தன்மை அற்ற பிராந்தியங்களில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறைக்கு பாதுகாக்கும், அமைதியை நிலைநாட்டும் ஆற்றலும் வல்லமையும் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மோரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட பிராந்தியங்களில் சரியான சமநிலை நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்தவும், நட்பு நாடானா அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து அமைதியான சூழலை உருவாக்க உறுதியளிக்கவும் முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Denial of huge investments in North Australian military bases - Prime Minister Scott Morrison indirectly sending a message to China 1கடந்த வாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், தைவான் மீதான மோதலில் ஒரு சாத்தியம் உள்ளதென்றும், அது மீண்டும் ஒன்றிணைவது என்பது சீனாவின் நீண்டகால நோக்கம் என்று கூறினார். இதனிடையே, பீட்டரின் கருத்துகள் எதுவும் ஆத்திரமூட்டும் வகையில் இல்லை என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அரசின் நோக்கங்கள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பாதுகாப்பு அமைச்சர் தெளிவாகவும், உறுதியாகவும் ஆதரிப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், அதற்கான தகுதியை அவர் கொண்டிருப்பதாகவும் மோரிசன் தெரிவித்துள்ளார். இதுவே பாதுகாப்புத்துறை அமைச்சரின் வேலை. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்வதான திறமையை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை உண்மையில் பயிற்சிகள் உறுதிப்படுத்தும் என்றும் இருநாட்டு கூட்டுப்பயிற்சிகள் குறித்து பிரதமர் கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறையை மேம்படுத்தி, சிறந்த பயிற்சி தளத்தை உருவாக்குவதும் அதன் மூலம் அவர்களின் திறமை மேம்படுத்தி ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே 747 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Minister Mike Pezzulloஇந்நிலையில், சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் வர்த்தகத் தொடர்பை பலப்படுத்துதன் அவசியம் குறித்து உள்துறை அமைச்சர் Mike Pezzullo பல்வேறு தகவல்களை பட்டியலிட்டுள்ளார். மத்திய அரசுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்கு முன் தேசிய நலனின் சில சமரசங்களை செய்ய வேண்டும் சீனா எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறினார்.

ஆஸ்திரேலியாவுடனான வர்த்த நடவடிக்கைகளில் சீனா பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், சுமூக நிலையை பேணுவது இருதரப்புக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும், தவறான பாதையில் சென்று இருநாட்டு உறவிலும் பாதகத்தை ஏற்படுத்துவதை தவிர்த்து நடைமுறையில் இணைந்து செயல்படுவதே சரியானது என்று வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் ஆடம்சன் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3xr8Coe