Breaking News

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஜனநாயக ஆதரவாளர்கள் Easter egg ஐ பயன்படுத்துவது பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. அதேநேரத்தில் மாற்று கருத்துள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ராணுவம் இறங்கியுள்ளது.

Democrats' use of the Easter egg to protest military rule in Myanmar has caught the attention of many. At the same time, the military has stepped in to arrest dissidents

இராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் மியான்மரில் தீவிரமடைந்து வருகிறது. இராணுவ ஆட்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ஈஸ்டர் திருநாள் முடிவுற்ற பிறகு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் ஈஸ்டர் முட்டைகளில் ஜனநாயக ஆதரவு கருத்துக்களை எழுதி போராட்டக்காரர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இராணுவ புரட்சிக்கு எதிராக போராடியதால் பிப்ரவரி 1ஆம் தேதி கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Democrats' use of the Easter egg to protest military rule in Myanmar has caught the attention of many. At the same time, the military has stepped in to arrest dissidents.மியான்மர் நாட்டில் ஏற்பட்டுள்ள புரட்சியை தொடர்ந்து கண்காணித்து வரும் Assistance Association for political prisoners அமைப்பு ராணுவத்தின் தாக்குதலால் இது வரை 557 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருவதையும் அவ்வமைப்பு உறுதிபடுத்தியுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பலர் போராடி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதாக 2658 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது