மோனாஷ் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி அமிர்தா லங்கா வயிற்று வலி காரணமாக அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்த சிறுமி, மருத்துவமனைக்கு வந்த 21 மணிநேரத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த மாவட்டத்தை பெரிதும் கவலையடைச் செய்துள்ளது. இதுதொடர்பாக விக்டோரியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால் விக்டோரியாவின் மோனாஷ் குழந்தைகள் நல மருத்துவமனை கொள்கையின் படி நோயாளியின் விவரங்களை வெளியிட முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் சிறுமி அமிர்தா மரணம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தனது கொள்கைகளை தளர்த்த வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மோனாஷ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேரடியாக போனில் அழைத்து மக்கள் பலர் கோரி வருகின்றனர்.