Breaking News

Northern Territory மாகாணத்தில் கோவிட் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவது ஏற்றுக்கொள்ள முடியாது : அரசு உறுதி அளித்ததை போல செயல்படவில்லை என பரவலாக எழும் குற்றச்சாட்டு

கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகளுக்காக பல நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளதால் மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், இதனால் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்றும், இது தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த உதவும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

Delay in Covid test results in Northern Territory is unacceptable. widespread accusation that the government has not acted as promised..இதனை அடுத்து முடிவுகள் விரைந்து அறிவிக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தன்படி செயல்படவில்லை என்றும், முடிவுகள் வர தாமதம் ஆவதால் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க நேரிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனிடையே Northern Territory –ல் எல்லைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு மற்றும் வெளி மாகாண பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு முதற்கட்டமாக அனுமதி வழஙகப்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவுகள் தாமதமாகும் நிலையில் இங்கு வரும் பயணிகளும் முடிவுகளுக்கு நீண்ட நாட்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டி வரும் என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பயண நேரத்திற்கு 70 மணி நேரத்திற்கு முன்னதாக கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும் நிலையில், இங்கு வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டால் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Natasha Fyles கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தாமதம் காரணமாக தொற்றுப்பரவல் தொடர்புகளை கண்காணிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், நெருங்கிய தொடர்புகளை மட்டுமே பரிசோதனை வளையத்தில் வைத்திருக்க முடியும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Delay in Covid test results in Northern Territory is unacceptable. widespread accusation that the government has not acted as promised,அரசின் பரிசோதனை மையங்கள் இல்லாத நிலையில் தனியார் மையங்கள் ஆயிரக்கணக்கான பரிசோதனை முடிவுகளை அறிவிக்க தாமதம் செய்து வருவதாகவும் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் Natasha Fyles தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக இங்கு வந்துள்ள ஏராளமானோர் குடும்பம் மற்றும் உறவினர்களை சந்திக்காமல் நீண்ட நாட்களாக விடுதிகளில் தனிமைப்படுத்துலில் இருப்பது அவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே Northern Territory அரசு உரிய நடவடிகை எடுத்து உடனடியாக கோவிட் பரிசோதனை முடிவுகள் வரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிக அளவில் எழுந்துள்ளன.

Link Source: https://ab.co/3JckAIc