Breaking News

ஆஸ்திரேலியாவில் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் : அரசு தடுப்பூசி தயாரிக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மாகாணங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 70% தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக வும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஃபைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் மாகாணங்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

எனவே ஃபைசர் தடுப்பூசி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் மாற்று திட்டங்களை அரசு செயல்படுத்தும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கும் பட்சத்தில் தற்போது செயல்படுத்துவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தடுப்பூசி செலுத்த முடியும் என்றும், அதற்கான கட்டமைப்பு ஆஸ்திரேலியாவில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பெரும்பாலும் வைரஸ் தடுப்பூசிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளதாகவும், இதனால் பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில் அக்டோபர் மாத இறுதியில் 70% தடுப்பூசி போடப்படும் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Delay in availability of Pfizer vaccines in Australia. Prime Minister Scott Morrison announces government plans to launch new vaccine programs..ஃபைசர் தடுப்பூசி ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்களில் அரசு மிகவும் நிதானம் காட்டி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் ஸ்காட் மோரிசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தொற்று பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வரும் சூழலில் அது குறித்து அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான உரிய தீர்வு தடுப்பூசி மட்டுமே என்பதை அரசு நிச்சயம் கவனத்தில் கொண்டு உள்ளதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார்.

எனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தயாரிப்பதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆஸ்திரேலியா கொண்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வயதினருக்குமான அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/2VyhBpH