Breaking News

கொரோனா ஓய்ந்த பிறகும் தொடரும் உயிரிழப்புகள் – ஆய்வில் அதிர்ச்சி..!!

ஓமைக்ரான் அலை ஓய்ந்ததை அடுத்து, கொரோனா அல்லாத இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது மருத்துவர்களை கவலையடையச் செய்துள்ளது.

Deaths continue even after corona subsides - shock in the study

ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம், நாட்டில் பதிவாகும் இறப்பு தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கோவிட்-19 வைரஸ் பரவல் காலக்கட்டத்தை தொடர்ந்து, கடந்த 5 மாதங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படாத 4000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் இறப்பு தரவுகளை வெளியிடும் பிரிவின் இயக்குநர் லாரன் மோரன், இறந்துபோன 4000 பேரில் பலருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி டிமென்ஷியா பாதிப்பால் 20 சதவீதம் பேரும், நீரிழிவு நோயினால் 18 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறப்புகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் மருத்துவர்களை கவலை அடையச் செய்துள்ளன. ஆஸ்திரேலியாவில் பொதுவாக கோடைக் காலத்தில் தான் உயிரிழப்புகள் அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதற்கு முன்பாகவே குளிர்காலங்களில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மருத்துவத்துறையினரை அச்சம் அடையச் செய்துள்ளன.