Breaking News

சிறையில் பழங்குடியினத்தவர் உயிரிழந்தது ஆஸ்திரேலியாவுக்கு அவமானம்- விசாரணை அதிகாரி அறிக்கை..!!

சீர்திருத்த மையத்தில் தங்கவைக்கப்பட்ட பழங்குடியின நபர் உயிரிழந்த சம்பவம், ஆஸ்திரேலியா மீது வெள்ளை இனவாத விமர்சனத்தை எழுப்பியுள்ளதாக மரண விசாரணை அதிகாரி ஹாரியட் கிரஹாம் தெரிவித்துள்ளார்.

Death of Aboriginal man in prison is a shame for Australia

கடந்த 2019-ம் ஆண்டு சீர்திருத்த மையத்தில் தங்கவைக்கப்பட்ட கெவின் பக்மி (57) என்கிற பழங்குடியின நபர் மாரடைப்பால் காலமானார். அவருடைய மரணம் தொடர்பாக நீதி விசாரணைக் கோரி குடும்பத்தினர் மனுதாக்கல் செய்தனர். கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்ற விசாரணையை அடுத்து, மரண விசாரணை அதிகாரி ஹாரியட் கெவின் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் அதிகாரி ஹாரியட் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஆஸ்திரேலிய அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளன.

Death of Aboriginal man in prison is a shame for Australia,ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள பர்கட்ஜி என்கிற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் கெவின் பக்மி. பர்கட்ஜி மக்கள், அந்நாட்டின் பாதுகாக்கப்படும் பழங்குடியின பிரிவில் இடம்பெற்றுள்ளனர். அதன்காரணமாக அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, கெவின் குழந்தையாக இருக்கும்போதே தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டார். அதையடுத்து அவரை குழந்தையில்லா பெற்றோர்களின் வீடுகள் மற்றும் சீர்திருத்த மையங்களில் வைத்து ஆஸ்திரேலியா அரசு பரமாரித்து வந்தது.

அவர் வளர்ந்து வாலிபனான பிறகு கொள்ளை, கொலை மற்றும் போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்கில் தொடர்புள்ள குற்றவாளியாக அறியப்பட்டார். கடந்த 2000-ம் ஆண்டு கெவின் பக்மி 20 வயதாக இருந்தபோது, அவர் மீதான கொலைவழக்கு உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளில் அவர் 50 முறை சிறை மாற்றத்தை சந்தித்துள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் மீண்டும் போதை பொருளை பயன்படுத்த தொடங்கினார். இதையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செஸ்நாக் சீர்திருத்த மையத்தில் உயிரிழந்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் சிறைகளில் இருக்கும் கைதிகளின் அவலநிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறையில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கைதிகளின் நலன் காக்கப்பட வேண்டும். அவர்களுடைய உடல்நலன் மற்றும் மனநலன் குறித்து அரசு அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கெவின் பக்மிக்கு ஒருவேளை பிணை கிடைத்திருந்தாலும், அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருந்தாலும் இந்த முடிவு ஏற்பட்டிருக்காது. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து, சிறையில் இறந்துபோன சம்பவத்தால், ஆஸ்திரேலியா மீது வெள்ள இனவாத விமர்சனம் எழுந்துள்ளது என்று தனது அறிக்கையில் அதிகாரி ஹேரியட் கிராஹாம் குறிப்பிட்டுள்ளார்.