Breaking News

Daniel Andrews உடல்நிலை முன்னேற்றம்..அறுவை சிகிச்சை ஏதும் தேவையில்லை !

Daniel Andrews Health improvement..No surgery required

விக்டோரியா மாநில முதல்வர் Daniel Andrews கடந்த செவ்வாயன்று Mornington Peninsula வில் உள்ள தன்னுடைய வீட்டில் கீழே விழுந்தார். இதனால் அவருடைய ஜி7 முதுகெலும்பு மற்றும் பல விலா எலும்புகள் உடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலை குறித்து இன்று Alfred மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் இயக்குனர் கூறுகையில், மாநிலத்தலைவர் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், எந்தவித அறுவை சிகிச்சை தேவையில்லை. அவர் நல்ல நிலையில் இருப்பதால் வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று கூறினார்.

Steve McGloughlinஇதைப்பற்றி Professor Steve McGloughlin கூறுகையில், Andrews நன்றாக இருப்பதாகவும், அவருக்கு இந்த நிலையில் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும்,ஆனால் இன்னும் அவர் முழுவதுமாக குணமடையவில்லை என்றார்.

மாநில முதல்வர் Daniel Andrews தன்னுடைய உடல்நலத்தை பற்றி ட்விட்டரில், தனக்கு இப்போது அறுவை சிகிச்சை தேவையில்லை. நான் முழுமையாக குணமடைய சிறிது காலம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியதாக கூறினார். மேலும் Alfred Hospital முழு குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். தான் Healesville பழங்குடி மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை விசாரிக்க குழு அமைப்பதற்காக செல்லும்போது தான் கீழே விழுந்ததாகவும் கூறினார்.

CT scan எடுத்ததில் தன்னுடைய விலா எலும்புகள் மற்றும் பல எலும்புகள் உடைந்துள்ளதாக தெரிகிறது. அதனால் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இன்று என்னை மிகவும் அக்கறையுடனும், கவனத்துடனும் பார்த்துக் கொண்ட விக்டோரிய ஆம்புலன்ஸ் துணை மருத்துவர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். தனக்காக தன்னுடைய அன்பினை செய்தி மூலம் அனுப்பிய என் குடும்பத்தார், நண்பர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள், விக்டோரிய மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.