Breaking News

விக்டோரியாவில் முடிவுக்கு வரும் ஊரடங்கு : கோவிட் பரவல் கட்டுப்பாடுகள் மேலும் சில வாரங்களுக்கு தொடரும் என அறிவிப்பு

Curfew ending in Victoria Covid spread restrictions announced to continue for a few more weeks

விக்டோரியா மாகாணத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும், புதிதாக சமூகப்பரவல் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு 11.59 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப் படுவதாகவும் ப்ரீமியர் Daniel Andrews தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் கோவில் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் சில வாரங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நிலை முடிவுக்கு வந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கான காரணங்கள் தேவையில்லை மேலும் வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே பயணம் செய்யும் தடையும் நீக்கப்படுகிறது.

Curfew ending in Victoria Covid spread restrictions announced to continue for a few more weeks.திறந்த வெளி அரங்குகளில் அரங்குகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நேரத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நான்கு சதுர மீட்டருக்கு ஒரு நபர் என்ற அளவில் உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நடன பள்ளிகள் உள்ளிட்டவை திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒருவர் வீடுகளுக்கு ஒருவர் குடும்பத்துடன் செல்வது தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என்றும் இந்த தடை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் பிரிமியர் Daniel Andrews தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொற்று பாதித்தவர்கள் உடன் தொடங்கி வைத்தவர்கள் இன்னும் தனிமைப் படுத்த நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மேலும் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விக்டோரியாவில் 24 ஆயிரத்து 340 பேருக்கு கோவில் பரிசோதனை செய்யப் பட்டதாகவும், லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள அருகமை மாகாணங்களில் இருந்து விக்டோரியா வருவதற்கு பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/nsIS6