குயின்ஸ்லாந்து மாகாணத்தின் முன்னாள் காப்பக நிபுணரான Mike Summerell கடந்த இரண்டு வாரங்களில் குயின்ஸ்லாந்து அரசின் நடவடிக்கைகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்தவகையில் கலாச்சார ரீதியில் மாகாணத்தை வழி நடத்துவதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகவும் இது தற்போது மாகாணத்தில் உருவெடுத்திருக்கும் மிகப்பெரும் புற்றுநோயாக உள்ளது என்றும் அவர் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மாகாண அரசு நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அதன் மூலம் மாகாணத்தில் கலாச்சார சீர்கேடுகளை களைய முடியும் என Mike Summerell கூறியுள்ளார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதிலளித்துள்ள ப்ரீமியர் Annastacia Palaszczuk, மக்கள் பணியாளர்கள் இன்னும் சிறப்பான முறையில் செய்து இருக்கலாம் என்றும் அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைத்தன்மையை ஆராய்வதற்கான தேவை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்த நேர்மையான விசாரணையை நடத்துவதற்கு மாகாண அரசு தயாராக இருப்பதாகவும் அது குறித்த விரிவான விசாரணையை வழக்கறிஞர் தலைமையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
சர்வதேச உறவுகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் தொடர்பாக இதற்கு முன்னதாக விசாரணை நடத்திய வழக்கறிஞர் Rachel Hunter இந்த விவகாரத்தை வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் தீர விசாரித்து மாகாண அரசுக்கு அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காப்பக நிபுணரின் குற்றச்சாட்டுக்கள் குறித்த அனைத்து விவகாரங்களும் அனைத்து மட்டத்திலும் விசாரணை நடத்தப்படும் என்றும் இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் குயின்ஸ்லாந்து மாகாண அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து டைரக்டர் ஜெனரல் இன் விசாரணை நியாயமான முறையில் இருக்காது என்ற விமர்சனங்களையும் முன்னாள் காப்பக நிபுணர் முன்வைத்துள்ளார் அரசின் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட நபர்களின் நடவடிக்கைகள் குறித்த ஏராளமான விமர்சனங்களையும் முன்னாள் காப்பக நிபுணர் Mike Summerell தொடர்ந்து கூறி வருகிறார். மாகாண அரசு மக்களிடம் தொடர்ந்து பொய்களைக் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் விசாரணை அறிக்கைக்கு பின்னர் முன்னாள் காப்பதற்கான உரிய பதில்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ப்ரீமியர் கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3gtkQph