Breaking News

ஒப்பந்ததாரருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானதால் நிறுத்தி வைக்கப்பட்ட பயணம் : இரண்டு நாட்களுக்கு பிறகு மெல்போர்னில் இருந்து புறப்பட்ட Sprit of Tasmania கப்பல்

மெல்போர்னில் இருந்து பயணிகளோடு புறப்பட வேண்டிய Sprit of Tasmania கப்பலில் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் பயணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உடனடியாக கப்பலின் டெக்-கில் பணியாற்றும் 17 ஊழியர்கள் பயணிகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் Sprit of Tasmania கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

Cruise aborted due to contractor's vulnerability. Spirit of Tasmania aboard Melbourne two days later.தாஸ்மானியா சுகாதாரத் துறை மேற்கொண்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்ததால் கப்பல் மீண்டும் தனது பயணத்தை தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. சுகாதாரத் துறையின் அனுமதியை எடுத்து கப்பல் சேவையை இரண்டு துறைமுகங்களிலும் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் Sprit of Tasmania கப்பலின் CEO Bernard Dwyer கூறியுள்ளார்.

திங்கட்கிழமை காலை முதல் இரண்டு துறைமுகங்களில் இருந்து கூடுதலாக ஒரு நாள் கப்பலை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும், சிக்கிக் கொண்ட பயணிகள் மீண்டும் தங்களது பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Cruise aborted due to contractor's vulnerability. Spirit of Tasmania aboard Melbourne two days later..Bass Strait, Devonport மற்றும் மெல்போர்ன் போர்ட் ஆகியவற்றில் இரண்டு நாட்களாக பயணிகள் சிக்கி தவித்த நிலையில் அவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. அவசரத் தேவைகளுக்காக விக்டோரியா புறப்பட்ட வேண்டியவர்கள் கொரொனா பரிசோதனையால் சிக்கிக் கொண்டதாகவும், இது தேவையற்ற அலைச்சலை அவர்களுக்கு ஏற்படுத்தி இருப்பதாகவும் பயணிகள் கூறியுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் மேற்கொள்பவர்கள் உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என்று சக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Link Source: https://ab.co/3odriWl