Breaking News

போர்க்கள கதாநாயகன் Ben Roberts Smith தொடர்பான வழக்கில் சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை : பெடரல் நீதிமன்றத்தில் சிப்பாய் மற்றம் வழக்கறிஞர் இடையே காரசார விவாதமாக மாறிய விசாரணை

ஆப்கானிஸ்தானில் கையில் ஆயுதங்கள் இல்லாத நபர்களை சுட்டுக்கொன்றதாக கூறப்படும் வழக்கில் போர்க்கள கதாநாயகன் Ben Roberts Smith மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணையில் ‘நபர் 14’ ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது கூறிய அவர், போர்க்கள கதாநாயகன் Ben Roberts Smith குறித்து 2018ம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் எதையும் தெரிவிக்கவில்லை என்றும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுப்பதாகவும் நபர் 14 தெரிவித்தார்.

Cross-examination of witnesses in the case of war hero Ben Roberts Smith. The trial that turned into a heated argument between a soldier and a lawyer in federal court.இதனை அடுத்து வழக்கறிஞர் Arthur Moses SC தனது குறுக்கு விசாரணையை தொடங்கினார். ஆனால் நபர் 14 மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய வழக்கறிஞர், இந்த நபர் ஒரு பொய்யர் என்றும் விமர்சித்தார். 2012ம் ஆண்டு போரின் போது ஆப்கன் ஒருவரை Ben Roberts Smith சுட்டதை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டதாக நபர் 14 கூறியுள்ளார்.

இதே போன்று 2009ம் ஆண்டு காலத்தில் ஆப்கன் ஒருவரை ஆஸ்திரேலிய சிப்பாய் ஒருவர், இலகு ரக துப்பாக்கியால் சுட்ட பின்னர் அவர் செயற்கை கால் பொருத்தி இருந்தது தெரியவந்ததாக கூறினார். இவை அனைத்தும் விஸ்கி 108 என்று பெயரிடப்பட்ட வளாகத்தில் நடைபெற்றதாகவும் நபர் 14 நீதிமன்றத்தில் கூறிய நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை Ben Roberts Smith மறுத்துள்ளார்.

ராபர்ஸ் ஸ்மித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கான்பெர்ராவில் பத்திரிகையாளர்கள் சந்தித்தது குறித்து வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

ஒரே ஒருவரை மட்டும் சந்தித்ததாகவும் ஆனால் போர் வீரர் குறித்து எந்த அவதூறான கருத்துக்களையும் தான் கூறவில்லை என்றும் நபர் 14 தெரிவித்தார். ஆனாலும், விடாமல் வழக்கறிஞர் Arthur Moses SC தொடர்ந்து கேள்விக்கணைகளை வீசினார்.

தொடர்ந்து நபர் 14 தான் போர்க்கால நிகழ்வுகள் குறித்த உண்மைகளை மட்டுமே கூறியதாகவும், எந்தவிதமான ஜோடிக்கப்பட்ட விஷயங்களை கூறவில்லை என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து விசாரணை மேலும் என்றும், நீதிபதி Anthony Besanko சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3gEsT2n