Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் மின்சார உற்பத்தி மற்றும் விநியோக நிலையம் போதுமான வகையில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Criticism has been leveled that the power generation and distribution plant operating in Western Australia has not been able to adequately meet the demand for electricity..

கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கடுமையான வெப்பநிலை நீடித்தது. அது தொடர்ந்து 4 நாட்களுக்கு இருந்தது. இதனால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மேற்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் ஆஸ்திரேலியாவின் எரிசக்தி சந்தைப்படுத்துதல் ஆணையர் மிசேல் ஷெஃபர்ட் சில புள்ளி இபரங்களை வெளியிட்டார்.

Criticism has been leveled that the power generation and distribution plant operating in Western Australia has not been able to adequately meet the demand for electricity.அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் சேர்த்து மொத்தம் 4 நாட்களில் 26 ஆயிரம் வாடிக்கையாளர்கள் 12 மணிநேரத்துக்கும் மேலாக மின்சார இல்லாமல் இருந்துள்ளனர். அதேபோல, குறிப்பிட்ட காலவரைக்குள் 40 ஆயிரம் பேர் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மின்சார இல்லாமல் இருந்துள்ளனர் என்கிற தகவல்களை தெரிவித்தார். மின்சார விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, இந்த எதிர்பாராத பிரச்னை உருவானது என்று கூறிய மிஷேல் ஷெஃபர்டு, பருவநிலை மாற்றம் காரணமாகவும் மின்சார விநியோக கோளாறு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Link Source: https://ab.co/3IBwxFK