Breaking News

தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்திய கிராமங்களில் நடைபெற்ற சாணியடி திருவிழா : இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து உற்சாகக் கொண்டாட்டம்

cow poo fight Festival in Indian Villages After Deepavali Youths Celebrate,

தென்னிந்தியாவின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைக் கிராமங்களில் நடைபெற்ற சாணியடி திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகாக நடைபெற்ற இந்த சாணியடி திருவிழாவில் இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசி கொண்டாடினர். இதன் மூலம் தங்களுக்கு இருக்கும் நோய் பாதிப்பு குணமடையும் என்று அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது.

cow poo fight Festival in Indian Villages After Deepavali Youths Celebrateஸ்பெயினில் கொண்டாடப்படும் தக்காளி திருவிழாவை போன்று கர்நாடக மாநிலம் Gumatapura கிராமத்தில் கொண்டாடப்பட்ட சாணியடி திருவிழாவில், பனிக்கட்டி போல சாணியை உருட்டி வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். Gorehabba திருவிழா என்று அழைக்கப்படும் இதில் பசு மாடுகளை வைத்திருப்போர் அதிகம் பங்கேற்கின்றனர். மேலும் பசுவின் புனிதம் அதன் பாதுகாப்புக்காக இது போன்ற திருவிழாக்களை அனுசரிப்பதாகவும், மாட்டுச் சாணம் உடல் மீது படும்போது வியாதிகள் குணமாவதாகவும் நம்பப்படுகிறது.

முன்னதாக டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று கோயில்களில் வழிபாடு நடத்திய மக்கள், பொது இடம் ஒன்றில் குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணத்தில் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினர்.

பொதுவாக இந்துக்கள் பசு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் அனைத்தும் புனிதமானது என்றும் அது மனிதர்களை புனிதப்படுத்தும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

cow poo fight Festival in Indian Villages After Deepavali Youths Celebrate.இந்து தேசியவாதியாக அறியப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பசு மாமிசங்கள் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளார். மேலும் அவர் சார்ந்துள்ள கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனோவுக்கு மாட்டு கோமியத்தை குடிப்பதன் மூலம் குணமாகும் என்று கூறி வந்தனர். இதற்கான எந்த வித அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பற்பசை, ஷாம்பு மற்றும் கொசுவத்திச் சுருள்களை மாட்டின் கழிவுகளில் இருந்து தயாரிப்பதற்கு பல்வேறு நிறுவனங்களை உற்சாகப்படுத்தி வந்தது.

Link Source: https://ab.co/301UuGl