Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மாகாணத்தில் பள்ளி ஒன்றின் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கோவிட் தொற்று : மாணவர்களை தனிமைப்படுத்தி பள்ளியை தொற்றுப்பரவல் மையமாக அறிவித்தது சுகாதாரத்துறை

Covid infection in students attending school prayer meeting in Adelaide, South Australia

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மாகாணத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள Willunga Primary பள்ளியில் காலை நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் காலை 9 மணி முதல் பத்து முப்பது மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி பள்ளியை தொற்றுப் பரவல் மையமாக அறிவிப்பதாகவும் அடிலெய்ட் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் ஆறு நாட்கள் முதல் 13 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Covid infection in students attending school prayer meeting in Adelaide, South Australia..தடுப்பூசி செலுத்துவதற்கான தகுதியில்லாத 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கூட்டத்தில் பங்கேற்று இருந்தால் அவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை 12 மணி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்து Willunga Primary பள்ளி தொற்றுப் பரவல் மையமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இக் கூட்டத்தில் பங்கேற்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த தனிமைப்படுத்தல் இல் இருந்து தப்பி இருப்பதாகவும், அதே நேரத்தில் யாரேனும் தொடர்பில் இருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்கள் குறைந்த பட்சம் 13 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பள்ளியை சுத்தம் படுத்துவதற்காகவும் தொற்றுப் பரவல் தொடர்புகளை கண்காணிப்பதற்காகவும் பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் திங்கட்கிழமை ஒரே நாளில் புதிதாக 13 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எடுத்து தொடர்பான விடயங்கள் குறித்த விரிவான பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. நேர விபரங்களோடு வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலின் அடிப்படையில் அங்கு சென்று வந்த நபர்கள் தங்களை உடனடியாக தனிமைப் படுத்திக் கொண்டு மாறும் அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை மேற் கொள்ளுமாறும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3dOt4qM