Breaking News

கோவிட் – 19 வரும் ஆண்டுகளில் நம் வாழ்க்கைச் சூழலை முற்றிலும் மாற்றும் : வைராலஜிஸ்ட் எச்சரிக்கை

சிட்னியின் பிரபல வைராலஜிஸ்ட் Eddie Holmes கடந்த ஆண்டுகளில் வைரஸ் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நடத்தி நியூ சவுத் வேல்ஸ் ன் 2020 ஆண்டுக்கான விஞ்ஞானி என்ற பட்டத்தை வென்றவர். இவர் தற்போதைய டெல்டா வகை வைரஸ் பரவலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் வரும் ஆண்டுகளில் நம் வாழ்க்கை முறையையும், சூழலையும் முற்றிலும் மாற்றி அமைக்கும் திறன் கொண்டதாக கொரோனா வைரஸ் மாறி வருவதாக அவர் கூறியுள்ளார்.

Covid– 19 will completely change our living environment in the coming years,. Virologist warnsஉலக நாடுகள் உடன் எலி, பூனை போல கொரேனா வைரஸ் விளையாட்டு காட்டிவருவதாகக் கூறியுள்ள Eddie Holmes எஞ்சிய வாழ்க்கை தீர்மானிக்கும் சக்தியாக வைரஸ் உருமாற்றம் பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றும் முற்றிலும் நம்மை விட்டுப் போகாது என்றும், அதன் உருமாற்றங்கள் தொடர்ந்து நம்மோடு இருந்து கொண்டே தான் இருக்கும் என்றும் Eddie Holmes கூறியுள்ளார். அதே நேரத்தில் அதன் உருமாற்ற வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்குமான வைரஸ் பாதிப்பில் மாற்றம் இருக்கும் என்றும், நாம் விரும்பாவிட்டாலும் இதுவே நிகழும் என்றும் Eddie Holmes தெரிவித்துள்ளார்.

Covid– 19 will completely change our living environment in the coming years. Virologist warnsதடுப்பூசிகள் எடுத்துக் கொண்டாலும் டெல்டா வைரஸ் போல உருமாற்றம் பெறும் வைரஸ்களின் பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் நம்மை அச்சுறுத்தும் என்றும், அது மிக மோசமான வைரஸ் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் Eddie Holmes கூறியுள்ளார். பல்வேறு உலக நாடுகளிலும் குறைவான அளவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்து உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்களிடம் வைரஸ் பாதிப்பு குறித்த தயக்கம் இருப்பதாகவும், சார்ஸ் கோவிட் 19 வைரஸ் உடன் தொடர்புடைய வைரஸ்கள் படிப்படியாக குறையும் என்றும் வைராலஜிஸ்ட் Eddie Holmes கூறியுள்ளார்.

Covid– 19 will completely change our living environment in the coming yearஎப்படி எதிர்பார்த்ததை விட மிக மோசமான பரவல் தன்மையை கொண்டதாக டெல்டா வகை வைரஸ் இருந்ததோ, அதைப் போன்ற அதன் பிந்தைய வைரசின் தன்மைகளும் இருக்கும் என்றும், டெல்டா வகை வைரசை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்றும் Eddie Holmes தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி பற்றாக்குறையில் தவிக்கும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும், குறைவான அளவே அவை தடுப்பூசிகள் செலுத்தி இருப்பதாகவும் Eddie Holmes கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3kDOERy