Breaking News

கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி தெற்கு ஆஸ்திரேலிய எல்லைக்குள் நுழைந்த இரண்டு விக்டோரியா இளம்பெண்கள் : கைது செய்து கொரோனா பரிசோதனை செய்த காவல்துறை

Covid 19 Two Victorian teenagers enter South Australian border in violation of restrictions. Police arrest and examine Corona

விக்டோரியாவில் காணாமல்போன இரண்டு இளம் பெண்கள் வழிப்போக்கு வாகனங்கள் உதவியோடு கட்டுப்பாடுகளை மீறி தெற்கு ஆஸ்திரேலியாவின் எல்லையை தாண்டி வந்துள்ளனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியது. அதில் இரண்டு இளைஞர்களுக்கும் நெகட்டிவ் என முடிவு வந்தது.

தெற்கு ஆஸ்திரேலியா விக்டோரியா உடனான தனது எல்லைகளை கட்டுப்பாடுகளுடன் மூடியுள்ளது. 70 கிலோ மீட்டருக்கு உள் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. பல்வேறு பிடிப்புக்கு வாகனங்களின் உதவியுடன் மாநிலத்தில் இருந்து அதன் எல்லையை வந்தடைந்து உள்ளனர். விக்டோரியாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Goolwa வில் உள்ள மற்றொரு தோழியை சந்திப்பதற்காக இரண்டு இளம்பெண்களும் புறப்பட்டு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே இரண்டு இளம் பெண்களின் முறையே வருகை தொடர்பாக குறித்த அச்சம் எதுவும் இல்லை என்று தெற்கு ஆஸ்திரேலிய தலைமை சுகாதாரத்துறை அதிகாரி Nicola Spurrier கூறியுள்ளார்.

இரண்டு இளம் பெண்களின் உடைய வருகை எந்த உள்நோக்கமும் கொண்டது அல்ல என்றும் மேலும் அவர்களுக்கு கொரனோ பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என முடிவு வந்ததாலும் அவர்கள் விக்டோரியா திரும்புவதற்கான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெற்கு ஆஸ்திரேலிய காவல் ஆணையர் Grant Stevens கூறியுள்ளார்.

Covid 19 Two Victorian teenagers enter South Australian border in violation of restrictions, Police arrest and examine Coronaஇரண்டு இளம்பெண்களும் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருவரும் முறையே 15 மற்றும் 16 வயது உடையவர்கள் ஆவர். விக்டோரியா ஹார்பர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் இருவரும் பள்ளி பேருந்தில் பயணித்தால் தொற்று தொடர்பு ஏதேனும் இருக்குமா என்பதை கண்காணிக்கும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா விதித்துள்ள கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று பாதிப்பு குறையாத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3vrXWV3