Breaking News

கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி கார் பின்புறம் ஒளிந்து குயின்ஸ்லாந்து தப்பிச் செல்ல முயன்ற நியூசவுத் வேல்ஸ் பெண் : போலீஸ் சோதனையில் சிக்கினார்

டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக குயின்ஸ்லாந்து தனது எல்லைகளை மூடியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட அண்டை மாகாணங்களிலிருந்து அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக யாரும் அனுமதிக்கப்பட மாட்டாது என குயின்ஸ்லாந்து திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

எல்லைப் பகுதியான Goondiwindi -ல் போலிசார் நடத்திய சோதனையில் காரின் பின்பகுதியான டிக்கியில் போர்வைகள் மற்றும் துணிகளை வைத்து மூடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மறைந்து இருந்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த 49 வயது பெண்ணான அவர் இதற்கு முன் இரண்டு முறை குயின்ஸ்லாந்து செல்ல முயற்சித்து தோல்வி அடைந்ததும், தற்போது காரின் பின்பக்கத்தில் மறைந்து குயின்ஸ்லாந்து செல்வதற்கு மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

New South Wales woman tries to escape Queensland by hiding behind car 19.காரில் ஏராளமான பர்னீச்சர் பொருட்களுடன் அவர் குயின்ஸ்லாந்து செல்ல இருந்த நிலையில் Goondiwindi எல்லை பகுதியில் போலீஸ் சோதனை சாவடியில் சிக்கினார். எல்லைகள் மூடப்பட்டு இருப்பது அறிந்தும் செல்ல முயற்சி செய்த காரணத்தால் பெண்ணை போலீஸ் கைது செய்து Boggabilla அழைத்துச் சென்றனர்.மேலும் எல்லை விதிகளை மீறியதால் அவருக்கு 4 ஆயிரத்து 135 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் இறுதி வரை எல்லகைளை திறக்கும் திட்டம் இல்லை என்று குயின்லாந்து தெரிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஆயிரத்து 29 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் டெல்டா வகை வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3BnK80p