Breaking News

கோவிட் 19 – விக்டோரியாவில் மருத்துவப் பணியாளர்கள் அதிக அளவில் பாதிப்பு : நூற்றுக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், வேலை இழக்கும் அபாயம்

விக்டோரியாவில் தீவிரமாக அதிகரித்து வரும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு மருத்துவ சுகாதார பணியாளர்கள் வரை பரவியுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் ஒரு சிலருக்கு தொட்டு உறுதியான நிலையில் நூற்றுக்கும் அதிகமான பணியாளர்கள் சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

covid 19 - Medical workers in Victoria at high risk. more than 100 isolated, at risk of losing their jobs,.விக்டோரியாவின் ராயல் மெல்போர்ன் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பலர் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற கடினமான சூழலை இதுவரை தாங்கள் எதிர்கொண்ட தில்லை என்றும் சுகாதாரப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ராயல் மெல்பான் மருத்துவமனையில் ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது புதிய தொற்றுப் பரவல் மையமாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாகவும், அதன் காரணமாகவே அங்கு உள்ள சுகாதார பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் விக்டோரியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதே போன்று Werribee Mercy மருத்துவமனையிலும் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்பில் இருந்த ஒரு சில சுகாதாரப் பணியாளர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

covid 19 - Medical workers in Victoria at high risk. more than 100 isolated, at risk of losing their jobs.இந்நிலையில் ஏராளமான சுகாதார பணியாளர்கள் தங்களது பணியை இழக்கும் அறிகுறிகள் தென்படும் இது ஒரு அபாய நிலை என்றும் மெல்போர்ன் அவசரகால மருத்துவரும் முன்னாள் ஆஸ்திரேலிய மருத்துவ கழகத்தின் தலைவருமான Stephen Parnis கூறியுள்ளார். இதேபோன்று பல்வேறு மருத்துவமனைகளிலும் 100 மற்றும் 200 சுகாதாரப் பணியாளர்கள் என தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர கால மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் அறுவை சிகிச்சைகள் எந்தவித தொய்வும் இன்றி நடைபெற்று வருவதாகவும் ப்ரீமியர் Daniel Andrews கூறியுள்ளார்.

மருத்துவமனைகள் தனிமைப்படுத்துதல் முகாம்கள் என ஏற்கனவே கடும் வேலை மற்றும் மன அழுத்தத்திற்கு சுகாதார பணியாளர்கள் ஆளான நிலையில், தற்போது தனிமைப்படுத்துதல் முகாம்களில் அடைக்கப்பட்டு வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட வைரஸ் பாதிப்பின் தீவிரம் உணர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Link Source: https://ab.co/3y3Jlja