Breaking News

கோவிட் 19 : மெல்போர்னில் முடக்க நிலை தொடங்கி 200வது நாள் – மேலும் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிப்பு

Covid 19. 200th day of freeze in Melbourne - announcement that further restrictions will continue

வைரஸ் பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமைதியற்ற நாட்களை தந்திருக்கும் நிலையில் அது தற்போது 200 ஆவது நாளை எட்டியுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு இந்த நாட்கள் மோசமான நாட்களாகவே நினைவடுக்குகளில் இருக்கும். பெருந்தொற்று காலத்தில் முடக்க நிலை தீவிரம் அடைந்ததால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையும் சோர்வடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Covid 19. 200th day of freeze in Melbourne - announcement that further restrictions will continue.மெல்போர்னில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டு 200 நாட்களை எட்டியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் 2020 போடப்பட்டு 2021 ஆகஸ்ட் மாதம் வரை நீண்டு கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் காரணமாகவே தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் மிகவும் கடுமையான கட்டுப்பாடு என்று கருதப்படும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் நிலை தான் மிக மோசமானது என்றும் ஆனால் அதன் மூலமாகவே இரண்டாவது அலையின் தாக்கம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை எளிதாக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக பரவல் மூலமாக 46 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட மார்ச் 30ஆம் தேதி கடுமையான முடக்கநிலை அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் 5 ஆக குறைந்தது.

இதுபோன்ற சரியான நடவடிக்கைகள் மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்துதல் மக்களுக்கான சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களால் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாகாணங்களிலும் அதன் முக்கிய நகரங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதும் ஊரகப் பகுதிகளில் சமூக பரவல் மூலமாக மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்படுவதும் தற்போது கவனம் செலுத்த வேண்டிய ஒன்று என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Covid 19. 200th day of freeze in Melbourne - announcement that further restrictions will continue...மேலும் அந்தந்த மாகாண அரசுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக முடக்க நிலையை அறிவிக்கலாம் என்றும், வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்களை அறிவுறுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இதே நிலை நீடிப்பது என்பது மிகவும் கடினம் என்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி விரைவாக முடக்க நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் பிரிமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Link Source: https://ab.co/2Uz6rAp