Breaking News

ஆஸ்ரேலியாவின் ACT மாகாணத்தில் கைதிகளை இடமாற்றும் விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் : கடந்த ஆண்டு கைதி தப்பியது குறித்த அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் முடிவு

ACT மாகாணத்தில் கடந்த 2021 ம் ஆண்டு ஜீலை மாதம் கைதிகளை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லும் போதும், வாகனங்களில் இடமாற்றும் போதும் கைதி தப்பிச் சென்ற விவகாரம் காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியது. கான்பெர்ரா அருகே ஜீப் ஒன்றின் மீது மோதும் சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ள நிலையில் அப்போது கைது தப்பிய ஓடிய விவகாரம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவான அறிக்கை அளித்துள்ளனர்.

அதில் கைதிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுதல் மற்று இடமாற்றுதல் விவகாரங்களில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சம்பவத்தின் போது காரில் இருந்த ரேடியோ வேலை செய்யவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், அதிலும் நவீன முறை மாற்றங்களை செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

Corrections made in the transfer of prisoners in the Australian province of ACT. Based on the report of the authorities on the escape of prisoners last year.அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் மற்றும் கைதிகளை அழைத்துச் சென்ற காவலர்கள் நிபுணத்துவத்துடன் செயல்பட்டதாக அறிக்கை வழங்கியுள்ள உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து, கைதிகளை அழைத்துச் செல்ல செடான் வகை காவல்துறை வாகனங்களை தவிர்த்து பெட்டியுடன் கூடிய பூட்டிய வகை வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. OCIS எனப்படும் திருத்தப்பிரிவு காவல்ஆய்வாளர் 9 பரிந்துரைகளை ACT மாகாண சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கான்பெர்ரா Alexander Maconochie பகுதியில் கைதி அழைத்துச் செல்லப்பட்ட டொயோட்டா காம்ரி வாகனத்தை Jeep ஒன்று பலமுறை மோதியதாகவும் அப்போது பேட்டரியை விழுங்கிவிட்டதாக கூறிய கைதிக்கு அருகில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

காவலர்களை திசை திருப்பி வாகனத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது கைதி கையில் போடப்பட்டிருந்த விலங்குடன் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிக வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கையாளும் போது ஏற்படும் இதுபோன்ற அபாயகரமான சம்பவங்களின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் பட்சத்தில் அதனை சரிசெய்யவது குறித்தும் OCIS அமைப்பு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் ஹாலிவுட் திரைப்படத்தை விஞ்சும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படும் குற்றவாளி முன்னதாகவே தப்பிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அதன் காரணமாகவே பேட்டரியை விழுங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் கடந்த ஓராண்டாக 3 முறை காவல்துறைக்கு அனுபவம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் பாதுகாப்பு விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Link Source: https://ab.co/3rCcLVG