Breaking News

பிரத்யேக வழித்தடங்களை திறந்ததன் காரணமாக கொரொனா பாதிப்பு அபாயம் : நியூசிலாந்து விமான நிலையம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பு

ஆக்லாந்த் விமான நிலையம் புதிய தொற்று மையமாக மாறாமல் பாதுகாப்பதை நியூசிலாந்து சவாலாக செய்து வருவதாக ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் Greg Hunt கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை அறிவிப்பை தொடர்ந்து விமானம் இயக்கப்பட்ட அடுத்த நாளே ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புகளை கொண்ட ரெட் சோன் – பகுதிகளில் இருந்து வந்த விமானத்தை சுத்தம் செய்த துப்புரவு பணியாளருக்கே தொற்று உறுதி ஆகியுள்ளது.

Corona vulnerability risk due to opening of special routes New Zealand airport declared safe.புதிய வழித்தடங்களை திறந்துள்ள நடவடிக்கைகளில் இந்த தொற்று விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார். இதுபோன்ற சமயங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளோடு தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்துதல் இல்லாத பயணத்திற்கு அனுமதி வழங்கியதை பயணிகளின் உறவினர்கள் கூடுதல் சலுகையாக எடுத்துக் கொண்டு கிவி விமான நிலையத்தில் அதிக அளவில் கூடிய அடுத்த சில நாட்களில் தொற்று பரவல் தொடங்குகிறது.

விமான நிலையம், எல்லைகளில் பணியாற்றுவோருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், வாரந்தோறும் பரிசோதனை என்பது கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் Jacinda Ardern கூறியுள்ளார்.

அறிகுறிகளுடன் தென்படும் தொற்றை தடுப்பூசி 95 % அளவுக்கு வீரியத்துடன் குறைக்கிறது என்றும், ஒரு வேளை தடுப்பூசி எடுத்துக் கொண்டவருக்கு தொற்று உறுதியானால் அவர் மூலமாக பரவுவது வெகுவாக குறையும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய புள்ளி விவரங்கள் அதனை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.