Breaking News

கொரோனா கால பயணத்தடைகள் பாரபட்சமானவை. ஒமைக்ரான் ஐரோப்பியாவில் தோன்றியிருந்தால், நிலைமை இப்படி இருந்திருக்காது ;- தென்னாப்பிரிக்கத் தூதர்.

Corona travel restrictions are discriminatory. Omicron If it has appeared in Europe, the situation would not have been like this; - South African Ambassador.

கொரோனாவில் ஒமைக்ரான் எனும் புதுவகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அதன் பரவலை குறைக்கும் நோக்கில் பயணங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டதற்கு, ஆஸ்திரேலியாவுக்கான தென்னாப்பிரிக்கத் தூதர் அரசின் மீது கடும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்தவாரம் ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய குடிமக்கள் மட்டும் மூன்றாம் உலக நாடுகள் வழியாக நாடு திரும்ப அனுமதி உள்ள நிலையிலும், நாடு திரும்புபவர்கள், பதினைந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும்.

Corona travel restrictions are discriminatory. Omicron If it has appeared in Europe, the situation would not have been like this; - South African Ambassador..இப்பகுதியில் இருந்து வரும் மற்ற அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில், தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால், பாதித்தவர்களின் எண்ணிக்கை, நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, இது நாட்டின் சுகாதார துறையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கான தென்னாப்பிரிக்காவின் உயர் ஆணையர், மார்தினஸ் வான் ஷால்க்விக், ‘நிலைமையை ஒமைக்ரான் என்ற புதுவகை வைரஸ் உடன் மட்டும் இணைத்துப் பார்க்காமல், பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையிலும் மதிப்பிட வேண்டும்’,என்று தனது வாதத்தை முன் வைத்துள்ளார்.

மேலும், தென்னாப்பிரிக்காவில், பயணம் இன்னும் தடை செய்யப்படாத இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட குறைவான எண்ணிக்கைகளே பதிவாவதாகவும் அவர் குறிப்பிட்டார். “இது பாரபட்சம் என்றே நாங்கள் கருதுகிறோம், ஏனென்றால் இந்த நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளன. ஆனால் மற்றவை அப்படி இல்லை” என்றும் திரு வான் ஷால்க்விக் வருத்தம் தெரிவித்தார். “தென்னாப்பிரிக்கா மட்டும் ஒரு ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது’’ என்றும் அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் கண்ட றியப்பட்டதை, உலகநாடுகள், “தடுப்பூசி ஏற்றத்தாழ்வை” சமாளிக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வான் ஷால்க்விக் கூறினார்.

Link Source: https://ab.co/3pzqFWb