Breaking News

பிரபல தனியார் விடுதி பாதுகாவலருக்கு கொரோனா..!!

Corona to famous private hotel guard

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் பணியாற்றும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Corona to famous private hotel guard,வெஸ்டர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிரபல தனியார் நட்சத்திர விடுதிக்கு உள்ளூர் பயணிகள் முதல் வெளியூர், வெளிநாடு பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனாவின் எந்த திரிபு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் தெளிவில்லை. அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்னும் டெல்டா வகை கொரோனா தாக்கம் இருப்பதால், ஒட்டுமொத்த தனியார் விடுதி நிர்வாகமும் கலக்கத்தில் உள்ளது.

இதனால் குறிப்பிட்ட பாதுகாவலருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை விடுதியில் தங்கியுள்ள 8 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது. அவர்களில் ஒருவரிடமிருந்து பாதுகாவலருக்கு தொற்று பரவி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3HQ1k1T