Breaking News

கொரோனா மூன்றாவது அலையில் தான் பாதிப்புகள் ஏராளம்- ஆய்வில் தகவல்..!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கொரோனா மூன்றாவது அலையில் பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது.

Corona third wave is the most vulnerable - study information .

உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்தோரின் எண்ணிகை அதிகரிக்க மூன்றாவது அலையில் அதிகம் என்கிறது ஆய்வு.

ஆஸ்திரேலியாவில் முதல் மற்றும் இரண்டாம் அலைகளை விடவும் மூன்றாவது அலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மோனாஷ் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. நியூசிலாந்தின் தீவிர சிகிச்சை அளிக்கும் அமைப்போடு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆஸ்திரேலியாவில் முதல் மற்றும் இரண்டாம் அலைக்கு இணையான பாதிப்புகள் மூன்றாவது அலையிலும் ஏற்பட்டுள்ளதை ஆய்வு உறுதி செய்துள்ளது.

Corona third wave is the most vulnerable - study information,நாடு முழுவதுமுள்ள 78 மருத்துவமனைகளை ஆய்வாளர்கள் தேர்வு செய்தனர். மொத்தமாக கொரோனாவின் மூன்று வெவ்வேறு காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 2493 நோயாளிகளின் விவரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அது மட்டுமில்லாமல், மருத்துவமனைகளின் கட்டமைப்பு, நிர்வாகம், சிகிச்சை அளிக்கும் திறன், நோயாளிகள் அனுமதிக்கப்படுவது வீட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு படிநிலைகள் வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

அதன்படி 2493 நோயாளிகளில் 59 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதல் அலையில் 32 சதவீதம் பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இது இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் போது, முறையே 29 விழுக்காடாகவும் 41 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது. மூன்றாவது அலையின் போது 19 சதவீதம் நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

Corona third wave is the most vulnerable - study information..முதல் அலையின் போது 14 சதவீத்தினர், அதாவது 30 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது அலையின் போது 12 சதவீதத்தினர் அதாவது 35 பேரும், மூன்றாவது அலையின் போது 17 சதவீதத்தினரும் உயிரிழந்துபோயுள்ளனர். மூன்றாவது அலை ஏற்பட்ட காலக்கட்டத்தில், அதிகப்பட்சமாக ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பாதிப்புகள் 82 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் மீண்டும் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நாடு முழுவதும் 227,000 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மோனாஷ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.