Breaking News

சீனாவில் பரவும் கொரோனா- ஷாங்காயில் ஊரடங்கு அறிவிப்பு..!!

ஷாங்காய் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவி வருவதை அடுத்து, பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யவும் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் சீன அரசு முடிவு செய்துள்ளது.

Corona spreading in China- Curfew announcement in Shanghai

சீனாவின் ஷாங்காயில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா வேகமாக பரவ தொடங்கியது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கியது. உலகப் பொருளாதாரம் சரியும் நிலைக்கு ஆளானது.

ஷாங்காயின் பல்வேறு உட்புறப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. நகரம் முழுவதும் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறியளவில் கட்டுப்பாடுகள் வரும் நாட்களில் ஏற்படுத்தப்படும் என சுகாதார அதிகாரி ஷாவ் தாண்டன் தெரிவித்துள்ளார்.

Corona spreading in China- Curfew announcement in Shanghai,அங்குள்ள பொருளா மைய கட்டிடத்தில் ஒரு நபருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அவருடன் தொடர்பில் இருந்த இரண்டு பேர் தனிமைப்படுத்துதலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஷாங்காயின் மொத்த மக்கள்தொகை 25 மில்லியன். கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 25 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் வசிக்கும் 16 மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது வணிகவளாகங்களுக்கு செல்பவர்கள், பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவோருக்கு சோதனை நடத்தப்படவுள்ளன.

தலைநகர் பீஜிங்கில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அன்ஹுவி மாநிலத்தில் ஒரு மில்லியன் வாழும் பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. வடமேற்கு மாவட்டமான ஷியானில் 7 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.