Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் கோரோனா நோயாளிகள் அவதி : சிக்கலில் தவிக்கும் மருத்துவத் துறை

Corona patients suffering from unavailability of hospital beds in Sydney, Australia The medical department in distress

ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

வைரஸ் பாதிப்புடன் வரக்கூடிய ஏராளமான நோயாளிகள் ஆம்புலன்சில் ஏறி பல்வேறு மருத்துவமனைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட நேரம் காத்திருக்க கூடிய சூழலும் உருவாகியுள்ளது.

Corona patients suffering from unavailability of hospital beds in Sydney, Australiaசிட்னியின் Blacktown மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோன்று Westmead மருத்துவமனையிலும் தீவிர அவசர சிகிச்சை தேவைக்கு மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நெடிக்கடி நிலையை சமாளிக்க தொற்று உறுதியான பின்னர் உரிய மருத்துவமனைகளை முன்னரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நிலை சிட்னி உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 643 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 113 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மருத்துவத் துறை செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Concord, Royal Prince Alfred, Canterbury புளித்த மருத்துவமனைகளிலும் ஆம்புலன்சில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன இதன் காரணமாக ஏராளமானோருக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் இது அவசர தேவைகளுக்கு காத்திருக்கும் நோயாளிகளுக்கு பெறும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Corona patients suffering from unavailability of hospital beds in Sydney, Australia.நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உலகிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பை கொண்டிருப்பதாகவும், இதன் மூலமாக பெரும்பாலான நோய் பாதிப்புகளை தாங்கள் சரி செய்து வருவதாகவும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard கூறியுள்ளார். வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய முறையில் படுக்கைகள் கிடைப்பதற்கும் உடனடியாக சிகிச்சைகள் கிடைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து மருத்துவமனைகளிலும் விரைந்து செய்யப்படும் என்றும், அதனை உறுதி செய்வதற்கு மாகாண ப்ரீமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3yuV0HX