Breaking News

ஆஸ்திரேலியாவில் ஏற்படும் மரண எண்ணிக்கையில் கொரோனா முதலிடம்..?

ஆஸ்திரேலியாவில் இருதய பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான எண்ணிக்கையை கொரோனா மரணங்கள் விரைவில் முந்திவிடும் என்று தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளர்.

Corona is the first in the number of deaths in Australia

குயின்ஸ்லாந்திலுள்ள மென்சிஸ் சுகாதார நிறுவனத்தின் பேராசிரியர் நைஜல் மெக்மில்லன், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆஸ்திரேலியாவில் ஏற்படும் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு முதல் முக்கிய காரணியாக உள்ளது இருதய பாதிப்பு. ஆனால் தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா மரணங்கள் விரைவில் அதை முந்திவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

Corona is the first in the number of deaths in Australia,குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 110 பேரில் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகுகின்றனர். இந்நோயின் தீவிரம் குறித்து மக்கள் முறையாக அறிந்திருக்கவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவில் இருதய பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளை எண்ணிக்கையில் கொரோனா மரணங்கள் முந்திவிடும் என்றார்.

 

குயின்ஸ்லாந்தில் 9992 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 983 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.