Breaking News

கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : தமிழகத்தில் உயரும் பலி எண்ணிக்கை

Corona infection on the rise in Coimbatore, Tirupur and Erode districts, Rising death toll in Tamil Nadu.

இரண்டாவது அறையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 475 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இவர்களில் 128 பேர் எந்த இணை நோயும் இல்லாதவர்கள் ஆவர். இவர்களில் 197 பேர் தனியார் மருத்துவமனையிலும் 278 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 33 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெறுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்து 224 ஆக உள்ளது.

Corona infection on the rise in Coimbatore, Tirupur and Erode districts, Rising death toll in Tamil Naduஇதனிடையே சென்னையில் அதிகமாக இருந்த தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்து நான்காயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. அந்த வகையில் 3 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் தொற்று தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 4 ஆயிரத்து 268 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. திருப்பூரில் ஆயிரத்து 880 பேருக்கும், ஈரோட்டில் ஆயிரத்து 642 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை பற்றாக்குறை எதுவும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கூடுதலாக மையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3yJ4oJe