Breaking News

விக்டோரியாவின் Mildura-வில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு : குறிப்பிட்ட தொற்றுப் பரவல் தொடர்பில் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்

வடமேற்கு விக்டோரியாவின் Mildura பகுதியில் சமூக பரவல் மூலமாக ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சென்று வந்த இடங்களை சுற்று பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 10ஆம் தேதி MCG -ல் Carlton-Geelong இடையே நடைபெற்ற AFL போட்டியில் தொற்று பாதித்த நபர் ஒருவர் சென்றிருந்த நிலையில் அதே இடத்திற்கு Milduraவை சேர்ந்த நபரும் சென்று உள்ளார். இதனையடுத்து இந்த போட்டிக்கு சென்றிருந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Corona infection in one person in Mildura, Victoria, Instructions for immediate testing for those with specific infectionMildura Base பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 30 வயதான அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது சீரான உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட நபரின் விவரங்கள் பாதுகாப்பு காரணமாக வெளியிடப்பட முடியாது என்று ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட AFL விளையாட்டுப் போட்டிக்கு சென்று வந்த மேலும் பல்வேறு நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி ஆகும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 மாதங்களாக பகுதியில் எந்த ஒரு தொற்று பாதிப்பு இல்லை என்றும் ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டதன் காரணமாக தங்கள் கொரோனாவில் இருந்து விடுபட்டு இருந்ததாகவும் மேயர் Jason Modica கூறியுள்ளார்.

இதனிடையே, வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான எல்லைப் பகுதிகள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வந்துள்ளன. குறிப்பிட்ட மாகாணங்களில் இருந்து மற்ற மாகாணங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3hLy1mU