Breaking News

இந்தியாவில் கொரோனா ஓரு நாள் தொற்று பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கிவருகிறது.

The daily incidence of corona infection in India is approaching 4 lakh.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 3.86 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 3,498 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதனால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2,08,830 ஆக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி நிலவரப்படி உலகில் ஏற்படும் 4 கொரோனா மரணங்களில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது.

இந்நிலையில் நேற்று 3,86,452 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து 1,53,84,418 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 2,97,540 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 31,70,228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 15,22,45,179 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 28,63,92,086 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 19,20,107 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 19,20,107 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்ட்ராவில் 66,159 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்ற அடுத்த இடத்தில் கேரளா 38,607 தொற்றுகளுடன் உள்ளது. 3ம் இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் 35,156 மரணங்களுடன் உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 771 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 395 பேர், உ.பி.யில் 298 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

The daily incidence of corona infection in India is approaching 4 lakhகடந்த 7 நாட்களில் இந்தியாவின் சராசரி கொரோனா மரணம் நாளொன்றுக்கு 2,882 என்று உலகிலேயே அதிகமாக உள்ளது. அமெரிக்கா, இந்தியா பிரேசில், மெக்சிகோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் கொரோனா மரணங்களில் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகள் ஆகும். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக தொற்று உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, பலி எண்ணிக்கை மேலும் 270 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 395 பேர் மரணிக்க மொத்தம் 24,235 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்றியுள்ளது.