Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் நடமாடும் உணவகம் ஒன்றின் ஊழியருக்கு கொரோனா தொற்று : ஏற்கெனவே தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது

Corona infection in an employee of a mobile restaurant in South Australia. already diagnosed in contact with an infected person

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீல்ஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அடிலெய்ட் உள்ள சமையலறையில் நேரம் செலவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தோற்று பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பட்டியலில் மீல்ஸ் ஆன் வீல்ஸ் சேர்க்கப்பட்டு்ள்ளது. மேலும் ஏற்கனவே தோற்று பாதிக்கும் பகுதியாக கண்டறியப்பட்ட இடங்களில் ஊழியர் சென்று வந்ததும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Hindmarsh பகுதி உள்ளிட்ட 24 இடங்கள் தொற்றுப் பரவல் பாதிக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு 60 வயதான முதியவர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவர் ஏற்கனவே தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

60 வயது முதியவரின் உறவினர்கள் 3 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்கள் அர்ஜென்டினாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பியவர்கள் என்றும் இவர்களில் ஒருவரோடு மீஸ் ஆன் வீல்ஸ் ஊழியர் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Corona infection in an employee of a mobile restaurant in South Australia. already diagnosed in contact with an infected person,இந்நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நபராக தொற்று பாதித்துள்ள உணவுக்கு ஊழியரை உடனடியாக தனிமைப்படுத்தி அவரோடு தொடர்பில் இருந்த நபர்களை கண்காணிக்கும் பணிகளையும் சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. மேலும் Hindmarsh கிளையிலிருந்து உணவு வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள முதியவர் உள்ளிட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட உணவகம் மூடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை இதுபோன்ற உணவகங்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3y1eYe6