Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேலும் 1405 பேருக்கு கொரொனா தொற்று : பல்வேறு இடங்களில் முடக்கநிலை நீக்கம்

Corona infection in 1405 more in New South Wales. Elimination of paralysis at various locations

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேலும் 1405 பேருக்கு சமூக பரவல் மூலமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 70 சதவீதத்தைத் தாண்டியதன் பின்னர் வரும் திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் எவ்வாறு சமூகத்தில் நடமாட முடியும் என்ற திட்டத்தை ப்ரீமியர் Gladys Berejiklian அறிவித்தார்.

Corona infection in 1405 more in New South Wales. Elimination of paralysis at various locations.வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படும், வீட்டிலிருக்கும் அனைவரும் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தால், ஐந்து விருந்தாளிகளை வீட்டிற்குள் வரவேற்க முடியும். நான்கு சதுர மீட்டருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மக்கள் நடமாட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் விடுதிகள், கடைகள், விளையாட்டு அரங்குகள், முடிதிருத்தகம் போன்ற சேவை வழங்கும் இடங்கள் திறக்கப்படும்.

தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்குப் பூச்சியம் என்றிருக்கும் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சில பிராந்திய இடங்களில், செப்டம்பர் 11ஆம் தேதி முதல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் ப்ரீமியர் அறிவித்துள்ளார்.

மேலும் 12 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், நோய்த்தொற்று குறையும் வரை எதையும் வெளியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ப்ரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Corona infection in 1405 more in New South Wales. Elimination of paralysis at various locations.,.அதே நேரத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களில் விவரங்கள் மற்றும் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் தொடர்பான விரிவான விபரங்கள் அரசு இணையதளங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

80 சதவீதம் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்ட பின்னரே உள் நாட்டு எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகளைக் திறந்து விமான சேவைகளை இயக்க முடியும் என்றும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆயிரத்து 175 மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையை கட்டுபடுத்தும் நோக்கில் கண்காணிப்பு திவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3k1ezU6