Breaking News

விக்டோரியாவில் புதிதாக 450 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Corona infection has been diagnosed in 450 new people in Victoria.

விக்டோரியா சுகாதாரத்துறை சார்பாக வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 42,765 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களில் 450 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களில் 75 பேருக்கு மட்டுமே தொடர்பறிதல் காண முடிந்ததாகவும்,மற்றவர்களுக்கு எவ்வாறு தொற்று பரவியது என்பது குறித்து விசாரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விக்டோரியாவில் தற்போது 143 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
34 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 24 செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மெல்போர்ன் பகுதியில் தொற்று பரவல் அதிகரித்து வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விக்டோரியாவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

Corona infection has been diagnosed in 450 new people in Victoriaமேலும் கடுமான பணியாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி பணி புரியவேண்டும் என்று விக்டோரியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அண்மையில் தொற்று கண்டறியப்பட்ட பலர் கட்டுமானத்துறையில் பணிபுரிபவர்கள் என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் 24 வாரத்தை கடந்த கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசிசெலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விக்டோரியாவில் 16 வயதை கடந்த 40% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும், 64 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திகொண்டிருப்பதாக காமன்வெல்த் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி சரியான பாதையில் விக்டோரியா நகர்வதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த இலக்கு எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/2XbKJDn