Breaking News

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1196 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளானர்.

விக்டோரியாவில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், குறைந்தளவே கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. தற்போது 284 பேர் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Corona infection has been confirmed in 1196 people in the last 24 hours in Victoria. 3 people died due to infection..கடந்த இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ள குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அதே நேரம் மாகாணத்தில் இன்னும் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டியதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது மாகாணத்தில் 9720 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் டெல்டா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 484 பேர் உயிரிழந்திருப்பதாகவும்
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .

தற்போது மருத்துவமனையில் உள்ளவர்களில் 52 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருக்கக்கூடிய உள்நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது .

Corona infection has been confirmed in 1196 people in the last 24 hours in Victoria. 3 people died due to infection.,72,754 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடம்த 24 மணி நேரத்தில் 3,358 பேருக்கு புதிதாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகையில் 12 வயதை கடந்தவர்களில் 89% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டாய தடுப்பூசி குறித்த விவாதம் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், 2022 குளிர் காலத்திற்கு மக்களை தயார் படுத்தும் வகையிலும், இந்த முடிவு அவசியம் என்றும் கருதப்படுகிறது. 90% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டாலும், தொற்று குறித்த கவனம் தேவை என்றும் அரசு அதனை கருத்தில் கொண்டு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3FKvouH