Breaking News

உரிய அனுமதி இன்றி குயின்ஸ்லாந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி : பிரிஸ்பேன் விமான நிலையத்தின் குறிப்பிட்ட பகுதிகள் மூடப்பட்டன

Corona infection confirmed for person arriving in Queensland without proper permission. Parts of Brisbane airport closed

சிட்னியில் இருந்து Virgin Airlines 917 விமானம் மூலமாக பிரிஸ்பேனுக்கு உரிய அனுமதி இன்றி வந்த நபர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பயன்படுத்திய உள்ளூர் விமான நிலையத்தின் Gate 24 பகுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

இதனையடுத்து உரிய பயண அனுமதி இன்றி வந்த அந்த நபர் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் Gate 24 நுழைவு வாயில் வழியாக வந்தவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறும் குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Corona infection confirmed for person arriving in Queensland without proper permission. Parts of Brisbane airport closed.மேலும் குறிப்பிட்ட பயணி விமான நிலையத்திற்கு வந்த பகுதிகளில் குறைந்த அளவிலான பாதிப்பு மற்றும் அதிக பாதிப்பு உடைய இடங்கள் கண்டறியப்பட்டு இணையதளங்களில் வெளியிட பட்டிருப்பதாகவும் குயின்ஸ்லாந்து பயணிக்கும் நபர்கள் அதனை பின் தொடர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் சமூக பெறவல் மூலமாக தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகாத நிலையில், 14 பேர் இதுவரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள வடமேற்கு பகுதிகளான Townsville கட்டுப்பாடுகளை தளர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 24 லட்சம் டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும், 7,000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் குயின்ஸ்லாந்து திரும்பும் சொந்த நாட்டில் இருக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்துதலை தவிர்த்து வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்வதற்கான முன்பதிவை இதுவரை ஆயிரம் பேர் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/2YIkKEL

leave a reply