Breaking News

ஆக்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாவலருக்கு கொரொனா தொற்று உறுதி : இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வாரம் தடை

Corona infection confirmed for isolated security guard in Auckland Two-week ban on travelers from India to New Zealand

புதிய தொற்றுப்பரவல் தொடங்கி இருப்பதை உறுதி செய்வதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரம் தொற்று கட்டுக்ககுள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Two-week ban on travelers from India to New Zealandஆக்லாந்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த 24 வயதான ஒட்டல் பாதுகாவலர், தொண்டை வலி காரணமாக பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் Ashley Bloomfield அறிவித்துள்ளார். தனியாக வசித்து வரும் இந்த நபர் ஈஸ்டர் காலங்களில் பணியாற்றியதாகவும், பணியிடம் மற்றும் வீடு தாண்டி எங்கும் வெளியில் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, தொற்று பரவ காணமாக இவர் இருக்க வாய்ப்பில்லை என்றும் நம்பப்படுகிறது. அதே நேரம், ஒரே ஒரு நபர் மட்டும் தொடர்பில் இருந்த்தாகவும் அவர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Two-week ban on travelers from India to New Zealand 1பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், மேலும் பரவாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இயக்குநர் Ashley Bloomfield தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து அரபு நாடுகள் வழியாக நியூசிலாந்து பயணம் மேற்கொண்ட 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து வரும் பயணகளுக்கு இரண்டு வாரம் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.