Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஓட்டல் தனிமைப்படுத்துதலில் இருந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று : மரபணு தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டு்ள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி தகவல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்-ல் ஓட்டல் தனிமைப்படுத்துதலில் இருந்த நபருக்கு தொற்று உறுதியானவை தலைமை சுகாதாரத்துறை அதிகாரி உறுதி செய்துள்ளார். அதே ஓட்டலில் ஏற்கனவே வேறொருவருக்கு தொற்று உறுதியான நிலையில் இரண்டாவதாக மற்றொரு நபருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இருவரும் அடுத்தடுத்த அறையில் தங்கி இருந்ததாகவும், மேலும் அந்த தளத்தில் 12 பேர் தங்கியுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தொற்றுப் பரவல் தொடர்பு சங்கிலி குறித்து இன்னும் ஆய்வு முடிவுகள் வராத நிலையில், ஓட்டலில் இருந்தவர்களுக்கு பரவியுள்ள தொற்று மரபணு தொடர்ச்சி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Corona infection Another person in hotel isolation in Western Australia Genetic continuity confirmed, Chief Medical Officer,.கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா வழியாக மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் துக்கு வந்த நபர் ஒருவர் நிலையில் அடிலெய்ட் பான் பசிபிக் ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு தோற்று உறுதியான நிலையில், விக்டோரியாவில் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் ஏழு நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே ஓட்டலில் அடுத்த அறையில் தங்கியிருந்த நபருக்கு தான் தொற்று பாதித்திருப்பதாக தலைமை சுகாதார அதிகாரி Andrew Robertson கூறியுள்ளார்.

Corona infection Another person in hotel isolation in Western Australia Genetic continuity confirmed, Chief Medical Officerஇந்த ஓட்டலின் காரிடாரில் மேலும் தங்கியுள்ள பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவரையும் வேறு வேறு அறைகளில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும், 14 நாள் தனிமைப்படுத்துதலில் அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் துணை சுகாதார அதிகாரி டாக்டர் Robyn Lawrence கூறியுள்ளார்.

சுகாதாரத்துறையினர் அவர்களை தினமும் தொடர்பு கொண்டு அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டு்ள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொற்று பாதிப்பு காரணமாக மட்டுமே என்றும், பெரும்பாலான ஹோட்டல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3uOUNO8