Breaking News

முழு ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை அருந்தினால் தான் கொரோனாவை வென்றெடுக்க முடியும் : மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Corona can only be won by taking the bitter pill of complete lockdown Chief Minister MK Stalin urges people to co-operate

தமிழகத்தில் இரண்டாவது அறையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே தரவுகளுடன் கூடிய பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்தது அது 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொதுமக்களுக்கு காணொளி வாயிலாக கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், அரசின் விதி முறைகளை கடைபிடித்து மக்கள் வீடுகளிலேயே இருந்தால்தான், ஒரு சங்கிலி உடைபட்டு தொற்று பரவல் குறையும் என்று கூறியுள்ளார். கொரோனாவை யாருக்கும் கொடுக்க மாட்டேன், யாரிடமிருந்தும் பெற மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு ஊரடங்கு காரணமாக ஏற்படும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளை சரி செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மக்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். முறையாக முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி தேவையின்றி, வெளியில் வருவதை தவிர்த்து வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா எனும் கொடிய நோயை விரட்ட ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Corona can only be won by taking the bitter pill of complete lockdown. Chief Minister MK Stalin urges people to co-operateஇதனிடையே தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைய தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 34 ஆயிரத்து 867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. 404 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே நேரத்தில் 20 ஆயிரத்து 872 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கோவையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேபோன்று ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு கண்காணிக்கும் வகையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையின்றி வெளியில் வரும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்காக மட்டும் இப்பதிவு முறையில் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Link source: https://bit.ly/2TkAtXT