Breaking News

ஆஸ்திரேலியாவில் நிறைவேறியது சர்ச்சைக்குரிய பெருந்தொற்று மசோதா : முதலில் அமல்படுத்துகிறது விக்டோரியா மாகாணம்

ஆஸ்திரேலியாவில் மிகவும் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்ட பெருந்தொற்று மசோதா பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவை அமல்படுத்தும் முதல் மாகாணமாக விக்டோரியா மாறியுள்ளது. ப்ரீமியர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தலைமை சுகாதார அதிகாரி ஆகியோர் நேரடியாக நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை விதிக்கும் வகையில் இந்த மசோதா வகை செய்கிறது.

Controversial pandemic bill passed in Australia. Victoria first implemented.சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அவசரச் சட்டம் என்று அழைக்கப்படும் இந்த பெருந்தொற்று மசோதா, சபையில் 20 ஓட்டுகளுக்கு 18 வாக்குகள் பெற்று நிறைவேறியது. மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் கடிதமும் அன்றைய நாளிலேயே மேல் சபையில் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த மசோதாவை முதலாவதாக அறிமுகப்படுத்தும் மாகாணமாக விக்டோரியா உள்ள நிலையில், கவர்னரின் ஒப்புதல் கிடைத்தவுடன் டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது உள்ள அவசரநிலை 15ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் 16ஆம் தேதி முதல் பெருந்தொற்று மசோதாவின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது.

முடக்க நிலை, முகக் கவசம் அணிதல், தடுப்பூசி அவசியம் மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான உத்தரவுகளை நேரடியாக பிரிமியர் மற்றும் சுகாதார அமைச்சர்கள் பிறப்பிக்கும் வகையிலான வழி வகையை இந்த பெருந்தொற்று மசோதா ஏற்படுத்தியுள்ளது.

Controversial pandemic bill passed in Australia. Victoria first implemented,இவர் 15 ஆம் தேதியுடன் அவசரநிலை முடிந்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வந்தாலும் பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், புதிய வகை வைரசான ஒமைக்ரான் குறித்த அச்சம் தொடர்ந்து நீடிப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3ryzP8e