Breaking News

மின்சார விநியோகத்தில் தொடரும் தட்டுப்பாடு- விழி பிதுங்கும் தொழில்துறை

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக இரும்பு ஆலை தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Continuing shortages in power supply in south australia

நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்யும் முயற்சியாக, மின்சார விநியோகத்தை முறைப்படுத்த ஆஸ்திரேலிய மின்சாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இரும்பு உற்பத்தி பணிகளுக்கு அதிகளவு மின்சாரத் தேவை உள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒரு சதவீத மின் பயன்பாடு, ஒரு இரும்பு ஆலைக்கு தேவைப்படும் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது மின்சாரத்தை பயன்படுத்த பெரியளவு தொகை செலுத்த வேண்டியுள்ளது.

Continuing shortages in power supply - eye-popping industryஒரு மணிநேரத்துக்கு ஒரு மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்த 55 டாலர் முதல் 60 டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு இரும்பு ஆலை நிறுவனம் சராசரியாக மாத முடிவில் 15 ஆயிரம் டாலர் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரும்பு ஆலை நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதுபோக மின்சார விநியோகச் சங்கிலியும் தெற்கு ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இரும்பு ஆலைகள், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அதிகளவிலான தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தெற்கு ஆஸ்திரேலியாவின் முதல்வர் பீட்டர் மேலிநாக்ஸுயஸ், மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எங்களுடைய அரசு நன்று உணர்ந்துள்ளது. மத்திய அரசிடம் முறையிட்டு மின்சார விநியோகம் தொடர்பான கொள்கை மாற்றியமைக்கப்படும். விரைவிலேயே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.