Breaking News

குயின்ஸ்லாந்தில் சிறுமி ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஏற்பட்ட தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால், கடந்த வாரம் தொற்று ஏதும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் 4 வயது சிறுமி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாகாண முதல்வர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.

சரக்கு லாரி ஓட்டுநரிடம் இருந்து இந்த சிறுமிக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சிறுமி கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வாரன் பூங்காவில் உள்ள ஒரு சிறார் பள்ளிக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த பள்ளியில் அன்றைய தினம் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும், தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.

விக்டோரியாவிற்கு அனுமதியில்லாமல் சென்று வந்த ஒரு குடும்பத்தினர் உட்பட, இரண்டு வாகன ஓட்டுநர்களும் தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனிமை படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

confirmation of an infection in a little girl in Queensland has caused fear among the people..குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குள் நுழைவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், விடுதிகளுக்கு ஏற்பட்டு வந்த தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. வரும் திங்கட் கிழமை சுமார் 680 தங்கும் தனிமைபடுத்தும் அறைகள் காலியாகும் என்றும் முதல்வர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குள் நுழைய என்.ஆர்.எல் விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு மாகாண முதல்வர் Palaszczuk பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசியல் ரீதியாக எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை என்றும், மக்களின் உயிர் காப்பது மட்டுமே நோக்கம் என்றும் மாகாண முதல்வர் Palaszczuk தெரிவித்துள்ளார்.

மேலும் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தற்போது 36% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 51% நபர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3tej2py