Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கட்டாய தடுப்பூசி விவகாரம் : 5 ஆயிரம் ஆசிரியர்கள் தடுப்பூசி போடாத நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்படும் அபாயம்

Compulsory vaccination in New South Wales. 5,000 teachers at risk of being fired for not vaccinating

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அத்தியாவசிய பணிகளில் இருப்போர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற உத்தரவை பின்பற்றாமல் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் அந்த விவரத்தை தங்களது துறை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி Yvette Cachia இதனை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கட்டாய தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் திங்கட்கிழமை முதல் பணி இடைநீக்கம் செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொது சுகாதாரத் துறையின் கட்டாய தடுப்பூசி அறிவிப்பில் ஆசிரியர்களும் இருந்த நிலையில் இத்தனை பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைசி நேரத்தில் தற்போது ஏராளமான ஆசிரியர்கள் தங்களது தடுப்பூசிகள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் அவர்கள் பணியில் சேரும்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கான சான்றிதழ்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் Yvette Cachia கூறியுள்ளார்.

Compulsory vaccination in New South Wales. 5,000 teachers at risk of being fired for not vaccinating..இதுவரை 74 ஆயிரம் ஆசிரியர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தாங்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை துறையிடம் பதிவு செய்துள்ளனர். இதனிடையே தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வதை காட்டிலும், அவர்களுக்கு ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் செய்து அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று One Nation கட்சி எம்பி Mark Latham கேட்டுக்கொண்டுள்ளார். ஆன்டிஜன் பரிசோதனை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும் அது தடுப்பூசியின் இடத்தை பூர்த்தி செய்யாது என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
Sarah Mitchell கூறியுள்ளார்.

அறிகுறிகள் தென்படும் ஆசிரியர்களுக்கு ஆன்டிஜன் ராபிட் பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்றும் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் ஆசிரியர்களை பள்ளிக்கு அனுப்புவது குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைக்கும் நடவடிக்கை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் தொடங்கப்படும் நேரத்தில் அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ் எனப்படும் விளையாட்டு நடனம் உள்ளிட்ட பயிற்சி நேரங்களில் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3nVaOAA