குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்கள் சமீபத்திய மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு மழை தொடர்ந்து நீடித்து வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரணத்தொகையாக 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பின்னர் இந்த அறிவிப்பை பிரதமர் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே, அறிவிக்ப்பட்ட மழை வெள்ள நிவாரணத் தொகையை முறையாக வழங்கவில்லை என்ற காரணத்தை கூறி லிபரல் கட்சி மேல்சபை உறுப்பினர் Catherine Cusack ராஜினாமா செய்துள்ளார். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்குவதில் முக்கியத்துவம் வழங்கி பராபட்சம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
Richmond பகுதியில் உள்ள Ballina, Byron மற்றும் Tweed இடங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்காக 2 ஆயிரம் டாலர் நிதி உதவியை பெற்றுத் தருவதில் கடுமையான பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் Catherine Cusack குற்றம்சாட்டினார். Ballina பகுதி மேயர் Sharon Cadwallader நிதி உதவியை அதிகரிப்பதாக கூறி இருந்ததாகவும் ஆனால் மக்களுக்கு நிதி உதவி கிடைப்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் லிபரல் கட்சி மேல்சபை உறுப்பினர் கூறியுள்ளார்.
கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள மக்களுக்கு தற்போதைய தேவைக்கு இல்லாத நிதி உதவி பின்னர் கிடைத்த என்ன பலன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக ஆளுநரிடம் தொலைபேசியில் பேசியதாகவும், நிதி உதவி தொடர்பான விவகாரங்களில் மாண்புடன் நடந்து கொள்ள வில்லை என்பதை அறிவுறுத்தியதாகவும் Catherine Cusack தெரிவித்துள்ளார்.
தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ள பகுதிகளில் மட்டுமே மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது போலவும், வடக்கு கடற்கரை மண்டலமான ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதியில் மக்கள் பாதிக்கப்படவில்லை என்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலுவதாகவும், இதுவே பதவி விலகுவதற்கான காரணமாக இருந்தாகவும் Catherine Cusack கூறியுள்ளார். 2019ம் ஆண்டு மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட Catherine Cusack –க்கு இன்னும் 2027 ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், தற்போது அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ப்ரிமியர் மற்றும் லிபரல் கட்சி மாகாண நிர்வாகி உள்ளிட்டோருக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3N0JMDF