Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அரசுக்குச் சொந்தமான வன வேளாண் நிறுவனத்தில் முறைகேடு புகார் : தனியார் விசாரணை அதிகாரியை நியமித்து செயற்பாட்டாளர் மீதான புகார்களை விசாரிக்கத் திட்டம்

VicForests என்று விக்டோரியா மாகாணத்தின் சொந்த நிறுவனமான வன வேளாண் மையத்திற்கு தொடர்புடைய விவகாரங்களில் செயற்பாட்டாளர் ஒருவர் மீதான முறைகேடு புகார்களை விசாரிப்பதற்கு தனியார் விசாரணை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

IBAC எனப்படும் ஆஸ்திரேலியாவின் ஊழலுக்கு எதிரான தன்னாட்சி விசாரணை அமைப்பு கடந்த ஆண்டு தெரிவித்த முறைகேடு புகார்களின் அடிப்படையில் தற்போது தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவதற்கு தனியார் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் விசாரணை நடத்திக் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட செயற்பாட்டாளர் மீதான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Vicforest நிறுவனத்திற்கு முழு பொறுப்பை ஏற்கும் வகையில் வேளாண்துறை அமைச்சர் Mary-Anne Thomas உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Complaint of abuse at a state-owned forestry company in the Australian state of Victoria. a plan to appoint a private investigator to investigate complaints against the operatorVicforest -ல் அமைப்பு ரீதியாக ஏற்பட்டுள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் VicForest அந்நிறுவனம் தாங்கள் சட்டவிரோதமாக எந்தவித விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் தங்களது செயல்பாடுகளில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வன வேளாண் நடவடிக்கைகளில் மாகாணத்தின் மனம் உள்ளிட்ட சொத்துக்களை பராமரித்து வரும் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுக்கள் என்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதாகவும் புகார்கள் குறித்த உண்மைத் தன்மையை விசாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்திரேலியாவின் ஊழலுக்கு எதிரான தன்னாட்சி விசாரணை அமைப்பான IBAC கூறியுள்ளது.