Breaking News

ஆஸ்திரேலியாவில் பெருந்தொற்று தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதாக ஸ்கை நியூஸ் மீது புகார் : பாராளுமன்ற விசாரணையில் காணொளி வாயிலாக ஆஜராகி விளக்கமளித்த சிஇஓ

கொரோனா பெருந்தொற்று தொடர்பான பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்த ஸ்கை நியூஸ் செய்தித் தளத்தில் யூடியூப் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிராக பதிவேற்றம் செய்து இருந்த ஆயிரம் வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் இந்த செயலுக்கு ஸ்கை நியூஸ் சிஇஓ Paul Whittaker கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அந்நிறுவனம் வெளிப்படையாக செய்யும் அபத்தமான செயல் என்றும், எது செய்தியாக இடம் பெற வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Complaint against Sky News for spreading misinformation about the epidemic in Australia. CEO who appeared in a video during a parliamentary hearing50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியா தொடர்பான வீடியோக்களை ஸ்கை நியூஸ் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த நிலையில் அதில் தரத்திற்கும், கொள்கைகளுக்கும் எதிராக இருந்ததாக ஆயிரம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும் ஒரு வார காலத்திற்கு ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தை முடக்கி இருந்தது. கொரோனா பெருந்தொற்று, தடுப்பூசி, மருந்துகள் உள்ளிட்டவை குறித்து தவறான தகவல்களை மக்களுக்கு பரப்பும் விதமாக செய்திகள் வெளியிட்டதாக ஸ்கை நியூஸ் நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் செனட்டர், முன்னாள் பிரதமர் உள்ளிட்டவர்களுடனான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் காணொளி வாயிலாக ஸ்கை நியூஸ் நிறுவனத்தின் சிஇஓ Paul Whittaker ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கடந்த ஜூலை மாதத்தில் முதல் அறையை விட இரண்டாவது அலையான டெல்டா வகை வைரஸ் வீரியம் குறைவானது என்பது போன்ற தவறான தகவல்களை பரப்பியதாக ஒளிபரப்பு வல்லுநர் Alan Jones மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் ஸ்பை நியூஸ் சிஇஓ Paul Whittaker காணொளி வாயிலாக அளித்த விளக்கத்தில், ஸ்கை நியூஸ் தொகுப்பாளர் Cory Bernardi, தான் பதிவிட்ட ட்வீட் குறித்து தனது தனிப்பட்ட தகவலை பகிர்ந்து கொண்டதாகவும், குறிப்பிட்ட மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலமாக கொரோனா குணமாகும் என்பது தொடர்பான தகவலை அவர் பகிர்ந்து தான் சர்ச்சைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Complaint against Sky News for spreading misinformation about the epidemic in Australia. CEO who appeared in a video during a parliamentary hearing..Ivermectin மருந்து தொடர்பான தகவலை பொதுமக்களுக்கு வழங்கும் போது உரிய கவனத்துடனும், அக்கறையுடனும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் இது தொடர்பான தவறான வழிகாட்டுதல்களை குறிப்பிட்ட செய்தி நிறுவனம் வழங்கியதாக முன்னாள் பிரதமர் Kevin Rudd
குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் பதில் அளித்தே ஆகவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சரியான அணுகுமுறையோடு மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்க்கும் விதமாக செய்திகள் தயாரிக்கப்படவில்லை என்றும், சமைக்காத மாமிசத்தை போல ஸ்கை நியூஸ் நிறுவனம் மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்த்து இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் Kevin Rudd தெரிவித்துள்ளார்.

இதனிடையே தடுப்பூசி கடும் தட்டுப்பாடு இருந்த சமயத்தில் Ivermectin, HydroxyChloroquine மருந்துகள் குறித்து அறிவியல் பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாகவும் அதில் தவறு எதுவும் இல்லை என்றும் ஸ்கை நியூஸ் சிஇஓ தனது தரப்பு வாதத்தை விசாரணையின்போது முன்வைத்துள்ளார்.

இதுபோன்ற தவறான செய்திகள் வெளியானதாக பொதுமக்களிடமிருந்து எந்தவிதமான புகார்கள் வரவில்லை என்றும், இது தொடர்பாக ஆஸ்திரேலிய ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தரப்பில் எந்த விதமான விளக்கங்களும் கோரப்படவில்லை என்றும் ஸ்கை நியூஸ் சிஇஓ Whittaker தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3DYyNpK